Thursday 25 July 2013

சித்தர்கள்




இன்றைய அவசர விஞ்ஞான யுகத்தில், எதற்குமே நேரமில்லை.வேலை பார்ப்பதும், பணம் சம்பாதிப்பதும் எதற்காக? ஒரு வேளை உணவு சாப்பிட நேரம் ஒதுக்க முடிகிறதா? அதற்குள் ஆயிரம் வேலைகள், சரி பணம் தான் தேவையான அளவு வந்து விட்டது என எண்ணி போதும் என்ற மனப்பான்மையுடன் வாழ முடிகிறதா? அதுவும் இல்லை, சரி பணம் பொருள் எல்லாம் இருந்தாலும், மனதில் நிம்மதி, படுத்தால் உறக்கம் வருகிறதா? அதுவும் இல்லை.பின் ஏன் தான் இந்த மாரத்தன் ஓட்டம்? எதற்காக? உங்களையே நீங்கள் கேட்டதுண்டா என்றாவது?

உங்களையே நீங்கள் ஆய்வு செய்ததுண்டா? நான் யார்? எதற்கு இந்த வாழ்க்கை, யாருக்காக நான் வாழ்கிறேன் ? எனக்காகவா? இல்லை குடும்பத்திற்காகவா? இல்லை நண்பர்களுக்காகவா? இல்லை மக்களுக்காகவா? யாருக்காக நான்?

எத்தனையோ அன்லிமிடெட் தேவைகள் இருந்தாலும், இந்த லிமிடெட் வாழ்க்கையில் நான் என்ன சாதித்துள்ளேன், என்ன இன்னும் சாதிக்க நான் எண்ணியுள்ளேன், அதனால் யாருக்கு என்ன பலன் ?
உங்களையே நீங்கள் கேட்டுக்கொண்டதுண்டா, எப்போதாவது?
சமூகத்தில் மனித நேயத்துக்கும், மனிதாபிமானத்துக்கும் உங்கள் பங்களிப்பு என்ன ? அதை விடுங்கள், உங்கள் நெருங்கிய உறவு அல்லது நட்பு இவர்களிடம் உங்கள் மனித நேய உறவு எப்படி? கேட்டுக்கொண்டதுண்டா, உங்களையே நீங்கள் எப்போதாவது?

கோவில் செல்வதும், வணங்வதும் போதுமா?
எப்போது நம் ஆன்மத்தேவையை நிறைவேற்றப்போகிறோம்?


இதுவரை கடந்த 10 அல்லது 5 ஆண்டுகளில் நம் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது? அடைய எண்ணியது என்ன? அடைந்தது என்ன?

யோசியுங்களேன் கொஞ்சம்!

இந்த அரிய உலகியல் வாழ்வின் மூலம் நாம் அடையப்போவது என்ன?


சித்தர்கள் யார்?

இன்றைக்கு அரசியலில் இருந்து ஆன்மீகம் வரை எங்கும் வியாபித்து விட்ட வாரிசு கலாச்சாரத்தில், சுயநலமின்றி,குடும்ப உறவுகள் இன்றி,எந்த அற்பப்பொருள் ஈட்டும் அவா இன்றி, தம்மை ஆட்கொண்ட உலகாளும் ஈசன் திருவடி சிந்தித்து, உலகோர் யாவரும் உய்ய உயிர் காக்கும் மூலிகை முதல் உடல் மன நலன் பேண யோகா வரை அள்ள அள்ளக் குறையாத வற்றாத மகா மேருவாக அவற்றின் பலன்களை உலகோர் அறிய ஏடுகளில் ஏற்றி வைத்த , உலகோர் அற்ப உலக மாயைகளில் சிக்கி அல்லலுருவது காணச்சகியாமல் மக்களை கடைத்தேற்ற எண்ணிய, அருளே உருவாக, கருணைக்கடலாக வாழ்ந்த இன்றும் என்றும் வாழ்கின்ற ஆதி சித்தர்கள் அருள் வரலாறு நமக்கு உணர்த்தும் வாழ்க்கை நெறி என்ன? என்றாவது நாம் கேட்டுக்கொண்டதுண்டா நம்மிடம் ?

இன்னும் பகிர்ந்து கொள்வோம்! மனம் தெளிவோம்!

அன்பன்,

ஞானக்குமாரன்.